Sunday, April 16, 2006

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

எம்முடைய பேச்சும், எண்ணமும் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வை புகழ்பவையாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய அவா. அந்த ஆவலின் காரணமாக இங்கு உருவானதே இந்த வலைப்பூ. இன்ஷா அல்லாஹ், இந்த வலைப்பூவில் நான் அறிந்த இஸ்லாத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்ஷா அல்லாஹ் உங்களின் உறுதுணை எனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பம் செய்கின்றேன்.

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு இன்றியமையாததைப் பற்றி நாம் இங்கு காண்போம்:

ஈமான் :
ஈமான் என்பது நம்பிக்கை எனப்படும். இந்த நம்பிக்கையானது உள்ளத்தால் உணர்ந்து ஏற்படுவதாகும். இந்த நம்பிக்கை எக்காலத்திற்கும் மாறாதவையாக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட நம்பிக்கைக்குத்தான் ஈமான் என அரபிப்பதம் கொண்டு அழைக்கின்றோம்.

இந்த ஈமான் ஆறு வகைப்படும். அது...

1. அல்லாஹ்வை நம்புதல்.
2. மலக்குமார்களை நம்புதல்.
3. நபிமார்களை நம்புதல்.
4. வேதங்களை நம்புதல்.
5. உலக இறுதி நாளை நம்புதல் மற்றும் மறுஉலக வாழ்கையை நம்புதல்.
6. நன்மை, தீமை இவையனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெருகிறது என நம்புதல்.

இப்படிப்பட்ட நம்பிகைத்தான் ஒரு மனிதனை, பண்பட்ட நெறிமுறைக்கு உட்பட்டு நடக்க இயலும் என்பதை இன்ஷா அல்லாஹ் பின்வரும் காலங்களில் அறிய வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக...

0 Comments:

Post a Comment

<< Home